சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோயிலுக்கு புதிதாக வாங்கப்பட்ட காளைக்கு, கிராம மக்கள் மேளதாளம் முழங்க பூரண கும்ப வரவேற்பு அளித்தனர்.
செவரக்கோட்டை கருப்பர் கோவிலுக்கு சொந்தமான காளை 4 மாதங்களுக்கு முன்பு இறந்து போனது. ஆண்டுதோறும் அங்கு நடைபெறும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் ஊரின் சார்பில் பங்கேற்க மதுரை மாவட்டம் மேலூரிலிருந்து புதிதாக காளை ஒன்று வாங்கப்பட்டது. அந்தக் காளை ஊர்வலமாக ஊருக்குள் அழைத்து வரப்பட்டபோது, கிராம மக்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். மேளதாளம் முழங்க, பெண்கள் குலவையிட்டும் ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளித்தனர்.