கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கியது.
வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணியில் 6 வன சரகங்களில் உள்ள 106 நேர்கோட்டு பாதையில், 318 வன ஊழியர்கள் மற்றும் தன்னார்வளர்கள் ஈடுபட்டுள்ளனர். இன்று பொள்ளாச்சி வனசரகத்திற்கு உட்பட்ட பூங்கன் ஒடை, போத்தமடை வனப் பகுதியில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது.
முதல் 3 நாட்களுக்கு புலி, சிறுத்தை உள்ளிட்டவைகளும், அடுத்த மூன்று நாட்களுக்கு மான், காட்டெருமை போன்றவைகளும், கடைசி மூன்று நாட்களில் தாவரங்களை கணக்கெடுக்கும் பணியும் நடைபெறுகிறது. இந்தமுறை மொபைல் போனில் புதிய செயலி உருவாக்கப்பட்டு கணக்கெடுப்பு பணியில் பயன்படுத்துவது சுலபமாக இருப்பதாக தன்னார்வலர்கள் தெரிவித்தனர்.