தமிழ்நாடு

குழந்தைகளுக்கான நோபல் விருது: தமிழக மாணவன் பெயர் பரிந்துரை

குழந்தைகளுக்கான நோபல் விருது: தமிழக மாணவன் பெயர் பரிந்துரை

Rasus

கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் சக்தி எனும் தமிழக மாணவர் சர்வதேச குழந்தைகளுக்கான நோபல் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரத்தை சேர்ந்த ரமேஷ், தமிழரசி தம்பதியின் மகன் சக்தி தற்போது ஏழாம் வகுப்பு படித்துவருகிறார். நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த இவர், கல்வியின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, மாணவர்களை பள்ளியில் சேர்க்க பெரும் முயற்சி எடுத்து வருகிறார். இந்நிலையில் ஐ.நா.சபை சார்பில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் அமைதிக்கான நோபல் பரிசுக்கு நாடு முழுவதும் 161 குழந்தைகள் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலிருந்து சக்தியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.