தமிழ்நாடு

டெல்லியில் தமிழக மாணவர் தற்கொலை

டெல்லியில் தமிழக மாணவர் தற்கொலை

webteam

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பயிலும் ரிஷு ஜோசுவா என்ற தமிழக மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரிஷி ஜோசுவா என்ற மாணவர் எம்.ஏ. ஆங்கிலம் இறுதி ஆண்டு பயின்று வந்தார். அவர் நேற்று காலை கல்லூரி அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மாணவரின் உடல் சப்தர்ஜங் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.இது சம்பந்தமாக மாணவனின் குடும்பத்தினருக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் தகவல் தரப்பட்டது. முதல் கட்டமாக மாணவன் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று போலீசார் தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிஷு ஜோசுவா நேற்று முந்தினம் மாலையில் இருந்து காணவில்லை என்று கல்லூரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கல்லூரி வளாகத்தில் இருக்கக்கூடிய ஒரு அறையில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது நேற்று காலை தெரிய வந்துள்ளது. தேர்வு ஒன்றை எழுதாததன் காரணமாக ரிஷு ஜோசுவா மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. எனினும் தற்கொலை செய்வதற்கு முன்னதாக மாணவர் தன்னுடைய பேராசிரியருக்கு இ-மெயில் அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்,விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ரிஷி ஜோசுவா குடும்பத்தினர் தற்போது வேலூர் மாவட்டத்தில் வசித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.