11ஆம் வகுப்பிற்கும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அண்மையில் அறிவித்திருந்தது. இந்நிலையில் பொதுத் தேர்வு மட்டுமின்றி 11ஆம் வகுப்பு மதிப்பெண்ணிற்கும் உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் வெயிட்டேஜ் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது. அதன் அடிப்படையில், இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு பாடத்திலும் 11ஆம் வகுப்பு மதிப்பெண் 100க்கும், 12ஆம் வகுப்பு மதிப்பெண் 100க்கும் கணக்கிடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது கல்லூரியில் ஒராண்டிற்கு இரு செமஸ்டர்கள் நடைபெறும். மூன்றாண்டு முடிவுகளில் ஆறு செமஸ்டர்களின் மதிப்பெண்ணை அடிப்படையாக கொண்டு மதிப்பெண் சதவிகிதம் கணக்கிடப்படும். அதே வகையில், தற்போது 11, 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மதிப்பெண் கணக்கிடப்பட இருக்கிறது. இதன் அடிப்படையில்தான் மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து இன்று வெளியாக உள்ள அரசாணையில் அனைத்து நடைமுறைகள் குறித்தும் விளக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை கூறியுள்ளது.