தமிழ்நாடு

பன்னீர்செல்வத்துக்கு அதிமுக எம்பிக்கள் 2 பேர் நேரில் ஆதரவு

பன்னீர்செல்வத்துக்கு அதிமுக எம்பிக்கள் 2 பேர் நேரில் ஆதரவு

webteam

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுகவின் மக்களவை உறுப்பினர்கள் 2 பேர் ஆதரவு தெரிவித்தனர்.

சென்னையில் உள்ள முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்துக்கு வந்த நாமக்கல் எம்.பி. பி.ஆர்.சுந்தரம் மற்றும் கிருஷ்ணகிரி எம்.பி. அசோக் குமார் ஆகியோர் நேரில் தங்களது ஆதரவினை தெரிவித்துள்ளனர். அதிமுக தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ள முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் தங்களது ஆதரவினை அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து தற்போது அதிமுகவின் மக்களவை உறுப்பினர்கள் இருவர் பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.