தமிழ்நாடு

போலீஸ் புரட்சி வெடிக்கும்: சமூக வலைதளங்களில் பரவும் பகீர்

webteam

காவல்துறையினருக்கு அத்தியாவசியமின்றி விடுமுறை கிடையாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் சூழலில், காவலர்களின் புரட்சி வெடிக்கும் என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.

தமிழக சட்டப்பேரவை தொடர் முடியும் நாளான ஜூலை 19-ம் தேதி வரை போலீசாருக்கு அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற காரணங்களுக்காக விடுப்பு அளிக்க கூடாது என காவல்துறை ஆணையர் அலுவலகம் சார்பில் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு போலீசார் மத்தியில் சற்று எதிர்ப்பு இருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில் காவலர் ஒற்றுமை, காவலர் சங்கமம் என்ற பெயர்களில் உள்ள முகநூல் பக்கங்களில், தமிழகத்தில் காவலர்களுக்கு அதிக பணிச்சுமை உள்ளதாகவும், குறைந்த ஊதியமே வழங்கப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளன. காவல்துறை மானியக்கோரிக்கையன்று தங்களது பெற்றோர்களை வைத்து சட்டப்பேரவையை முற்றுகையிட காவலர்கள் முயற்சிப்பதாகவும் சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன. எதுவாயினும் தமிழக காவல்துறையில் விரைவில் புரட்சி வெடிக்க காத்துள்ளது எனவும் ஒரு பதிவு குறிப்பிடுகிறது.