காவல்துறை கைது நடவடிக்கை web
தமிழ்நாடு

"ஆப்ரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்" ஒரே இரவில் 100-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது.. சென்னை காவல்துறை அதிரடி!

போதைப்பொருள் விற்பனை மற்றும் சமூக விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்தவர்களை குறிவைத்து நேற்றிரவு காவல்துறை அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது.

Premkumar S

சென்னையில் ரவுடிகள் மோதல், போதைப்பொருள் விற்பனை தடுப்பு, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்துவதற்காக "ஆப்ரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்" என்ற பெயரில் சென்னை மாநகர காவல்துறை நேற்று இரவு முதல் இன்று காலை வரை நடத்திய தேடுதல் வேட்டையில் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, தி.நகரில் 18 பேர், அடையாரில் 16 பேர், புளியந்தோப்பில் 20 பேர், அண்ணா நகரில் 10 பேர், மயிலாப்பூரில் 12 பேர் என சென்னை முழுவதும் தற்போது வரை 100 -க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், இவர்கள் முன் விரோத ரவுடிகள், சரித்திர பதிவேடு குற்றவாளிகள், போதைப்பொருள் விற்பவர்கள், கட்டப்பஞ்சாயத்து ரவுடிகள் என சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்கள் எனவும் இந்த கைது நடவடிக்கை இன்று மாலை வரை தொடரும் என காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து, பொதுமக்களின் பாதுகாப்பு குந்தகம் விளைவிக்கும் எவரொருவரின் மீதும் நடவடிக்கை தொடரும் என காவல்துறை எச்சரித்திருக்கிறது.