தமிழ்நாடு

இன்று பதவியேற்கின்றனர் தமிழக எம்.பி.க்கள்..!

இன்று பதவியேற்கின்றனர் தமிழக எம்.பி.க்கள்..!

Rasus

தமிழகத்தில் இருந்து மக்களவை தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இன்று பதவியேற்க உள்ளனர்.

17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஸ்மிருதி இரானி, காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி உள்ளிட்டோர் என மொத்தம் 313 எம்பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக, தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்த எம்பிக்கள் இன்று பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்கின்றனர். திமுகவின் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்ளிட்டோரும் பதவியேற்க உள்ளனர். பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் தலைவர் பாரிவேந்தரும் இன்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்கிறார். மேலும், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட காங்கிரஸ் எம்பிக்களும் பதவியேற்கின்றனர்.