தமிழ்நாடு

மூளைக்காய்ச்சல் தொற்றுநோயல்ல : அமைச்சர் விஜயபாஸ்கர்

மூளைக்காய்ச்சல் தொற்றுநோயல்ல : அமைச்சர் விஜயபாஸ்கர்

webteam

கோவையில் மூளைக் காய்ச்சலுக்கு இளம் பெண் உயிரிழந்த நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மூளைக் காய்ச்சல் தொற்றுநோயல்ல என விளக்கமளித்துள்ளார்.

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் காவல்துறையினருக்கான ரத்த தான முகாமை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்‌நிகழ்ச்சியில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், தங்கமணி, தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன்,டிஜிபி டி.கே.ராஜேந்திரன்,ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்  ஆகியோர் பங்கேற்றனர்.

காவலர்களின் ரத்ததான முகாமில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,தமிழகத்தில் மூளை காய்ச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை என்றார்.அப்படியே காய்ச்சல் ஏற்பட்டாலும் சரி செய்ய அனைத்து வசதிகளும் தமிழகத்தில் இருப்பதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர் மூளைக்காய்ச்சல் தொற்று நோயல்ல என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். கோவையில் மூளைக் காய்ச்சலுக்கு இளம் பெண் உயிரிழந்த நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.