ஒரு வாரத்தில் நிவாரணத்தொகை
ஒரு வாரத்தில் நிவாரணத்தொகை புதிய தலைமுறை
தமிழ்நாடு

"புயல் நிவாரண தொகையான ரூ.6000 இன்னும் ஒரு வாரத்திற்குள் அளிக்கப்படும்" - அமைச்சர் உதயநிதி

ஜெனிட்டா ரோஸ்லின்

புயல் நிவாரண தொகையான ரூபாய் 6000 இன்னும் ஒருவாரத்திற்குள் அளிக்கப்படும் என்று விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு நிவாரண தொகையாக ரூபாய் 6000 , அந்தந்த பகுதி ரேஷன் கடைகளின் மூலமாக ரொக்கமாக வழங்கப்படும் என்று ஏற்கனவே முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பினை வெளியிட்டிருந்தார்.

ஆனால் எப்போது வழங்கப்படும் என்ற தேதியானது குறிப்பிடப்படாமல் இருந்தது.

இந்நிலையில், தற்போது விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இது குறித்த தகவல் ஒன்றினை தெரிவித்துள்ளார். அதில், “நிவாரண தொகைகள் கொடுக்கப்பட உள்ள ரேஷன் கடைகளிலேயே சில இடங்களில் தண்ணீர் தேங்கிய நிலையிலும், பொருட்கள் சேதமடைந்த நிலையிலும் உள்ளது.

எனவே முதலில் அதனை சரி செய்து விட்டு பின்னர் ஒரு வாரத்திற்குள் டோக்கன்கள் வழங்கி நிவாரண தொகையானது அளிக்கப்படும்.

எதிர்க்கட்சிகள் என்றாலே வெள்ளை அறிக்கை கேட்பது என்பது வழக்கம்தான். எனவே நாம் நமது வேலையை சரியாக செய்து விட்டு செல்ல வேண்டும். சமீபத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தமிழகத்திற்கு வந்து புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட்டு சென்றுள்ளார்.

முதலமைச்சரும் புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து விளக்கியுள்ளார். எனவே முதற்கட்டமாக மத்திய அரசு குறிப்பிட்ட தொகையை வழங்கியுள்ளனர். விரைவில் அடுத்த கட்ட தொகையும் வழங்கப்படும் என்று நம்புகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.