சென்னையில் நியாயவிலை கடைகளிலுள்ள உணவுப்பொருட்களின் தரம் குறித்து அமைச்சர் காமராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பொது விநியோகத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் காமராஜ் கூறினார். மேலும், ஸ்மார்ட் கார்டிலுள்ள குறைகள் சரிசெய்யப்பட்டு வருவதாகவும், இதுவரை ஸ்மார்ட் கார்ட் கிடைக்காதவர்கள் பழைய குடும்ப அட்டையை வைத்தே நியாயவிலை கடைகளில் உணவுப்பொருட்களை வாங்கலாம் என்றும் அமைச்சர் தெரிவித்தார். தீபாவளி பண்டிகைக்கு தங்குதடையின்றி நியாயவிலை கடைகளில் உணவுப்பொருட்கள் கிடைக்கும் வகையில் கையிருப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.