அமைச்சர் சிவசங்கர் - எடப்பாடி பழனிசாமி முகநூல்
தமிழ்நாடு

”அதிமுகவின் ‘சார்’களை நினைவிருக்கிறதா?” - அமைச்சர் சிவசங்கர்

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருக்கும் அவர், சென்னை பெரம்பூரில் சிறுமிகள் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை காவல் துறை கைது செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

PT WEB

சார்’களை காப்பாற்றுவதில் கைதேர்ந்தவரான அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, அதிமுகவின் ‘சார்’களை நினைவிருக்கிறதா என்று அமைச்சர் சிவசங்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருக்கும் அவர், சென்னை பெரம்பூரில் சிறுமிகள் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை காவல் துறை கைது செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், விரைவாக நடவடிக்கை எடுத்துவிட்டார்களே என்ற விரக்தியிலும், தனக்கு அரசியல் ஆதாயம் கிடைக்க வேண்டும் என்ற ஆர்வத்திலும் அலையும் எடப்பாடி பழனிசாமி வழக்கம் போல அரசை குறை கூறி அவதூறு பதிவிட்டுள்ளதாக கூறியுள்ளார். அதிமுக ‘சார்’களை மறந்துவிட்டீர்களா பழனிசாமி என்று கேள்வி எழுப்பியிருக்கும் அமைச்சர் சிவசங்கர், பெண்கள் நலனிலும் பாதுகாப்பிலும் அக்கறை கொண்டு சிறப்பாக செயலாற்றி வரும் திமுக அரசை குறை கூறினால், அதை மக்களே ஏற்க மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.