காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் ஏரி, முழு கொள்ளளவை நெருங்குவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில், அமைச்சர்கள் ஏரியை இன்று நேரில் ஆய்வு செய்தனர்.
மதுராந்தகம் ஏரியை அமைச்சர்கள் அன்பழகன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் பொன்னையா உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். பின்னர் பேசிய அமைச்சர் அன்பழகன், ஏரியின் முழு கொள்ளளவான 23 அடியில் தற்போது 21.6 அடி அளவிற்கு நீர் நிரம்பியுள்ளதாகவும், 500 கனஅடி வரையே நீர்வரத்து இருப்பதால் மக்கள் தற்போது அச்சப்படத் தேவையில்லை எனவும் கூறினார். இருப்பினும் மாவட்ட நிர்வாகம் சார்பில் 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விட்டிருப்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.