தமிழ்நாடு

சினிமா கேளிக்கை வரி 8 சதவிகிதமாக குறைப்பு

சினிமா கேளிக்கை வரி 8 சதவிகிதமாக குறைப்பு

webteam

திரைப்படங்களுக்கான கேளிக்கை வரியை 10 சதவிகிதத்திலிருந்து 8 சதவிகிதமாக குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

திரைப்படங்களுக்கான கேளிக்கை வரி முன்பு 30 சதவிகித்தில் இருந்து 10 சதவிகிதமாக குறைக்கப்பட்டிருந்தது. திரைத்துறையினரின் கோரிக்கையை ஏற்று, தற்போது மேலும் 2 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பிற மொழி திரைப்படங்களுக்கான கேளிக்கை வரி 20 சதவிகித‌மாக உள்ளது. அதையும் குறைக்க வேண்டுமென திரைத்துறையினர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தலைமையிலான அணியினரும், திரையரங்கு உரிமையாளர் சங்கத்தலைவர் அபிராபி ராமநாதன் தலைமையிலான அணியினரும் தனித்தனி‌யே, முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.