தமிழ்நாடு

மழையை சமாளிக்க அரசு தயார்: ஆர்.பி.உதயகுமார்

மழையை சமாளிக்க அரசு தயார்: ஆர்.பி.உதயகுமார்

webteam

தமிழகத்தில் அடுத்து பெய்யவிருக்கும் மழையையும் சமாளிக்க அரசு தயாராக இருப்பதாக அமைச்சர் ஆ.பி.உதயகுமார் தெரிவித்தார்.

சென்னை எழிலகத்திலுள்ள சிறப்புக் கட்டுப்பாட்டு அறையை அமைச்சர் ஆய்வு செய்தார். பின்னர் பேசிய அவர், சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையின்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ள அபாயத்தில் இரண்டு கர்ப்பிணிகள் சிக்கிக்கொண்டதாக புதியதலைமுறை வெளியிட்ட செய்தியின் அடிப்படையில் அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டதாகக் கூறினார். மேலும், தொடர்மழை, கனமழை, வெள்ளம் என எது வந்தாலும் அதை எதிர்கொள்ள அரசு தயாராக இருப்பதாகவும், வடகிழக்கு பருவமழை முடியும் வரை கட்டுப்பாட்டு அறை இயங்கும் எனவும் அமைச்சர் கூறினார்.