தமிழ்நாடு

‘பொங்கல் பரிசு திட்டம்’ : நாளை மறுநாள் முதல் தொடக்கம்

‘பொங்கல் பரிசு திட்டம்’ : நாளை மறுநாள் முதல் தொடக்கம்

webteam

பொங்கல் பரிசு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் தொடக்கி வைக்கிறார்.

கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத் தொடக்க விழாவில் நேற்று பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்கப்படும் என அறிவித்தார். அதோடு, அரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய் மற்றும் 2 அடி நீளக் கரும்பும் கொண்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். 

இந்நிலையில், பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய் மற்றும் பரிசுத் தொகுப்புக்காக 2 ஆயிரத்து 363 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு திட்டத்தை நாளை மறுநாள் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைக்கிறார்.