தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தை பிரித்து, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என 3 மாவட்டங்கள் உருவாக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதேபோல நெல்லை மாவட்டம் நெல்லை, தென்காசி என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.