தமிழ்நாடு

நீட் தேர்ச்சி குறைவுக்கு மாநில அரசே காரணம்: மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

நீட் தேர்ச்சி குறைவுக்கு மாநில அரசே காரணம்: மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

webteam

நீட் தேர்வில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி குறைவுக்கு மாநில அரசே காரணம் என மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  நீட் தேர்வில் தேர்ச்சி குறைவானதற்கு மாணவர்களை நான் குறைகூற விரும்பவில்லை என்றும் அவர் கூறினார். நீட் தேர்வு முடிவுகள் நமக்கு நல்ல பாடத்தினைக் கொடுத்துள்ளாதாகக் கூறிய அவர், பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். தேசிய அளவில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்பட்ட நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளில், முதல் 25 இடங்களில் ஒரு தமிழக மாணவர் கூட இடம்பெறவில்லை.