தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்

Rasus

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசைக் கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக அவசரச் சட்டம் கொண்டுவந்துள்ள சூழலில் தமிழக அரசு சார்பில் இந்த கேவியட் மனு தாக்கல்‌ செய்யப்பட்டிருக்கிறது. அதில், ஜல்லிக்கட்டு தொடர்பாக யார் வழக்கு தொடர்ந்தாலும், தமிழக அரசின் கருத்தைக் கேட்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசு தரப்பின் கருத்தைக் கேட்காமல் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் எந்த உத்தரவையும் உச்சநீதிமன்றம் பிறப்பிக்கக்கூடாது எனவும் தமிழக அரசின் கேவியட் மனுவில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

தமிழக அரசு கொண்டுவந்துள்ள அவசரச் சட்டத்திற்கு எதிராக பீட்டா போன்ற அமைப்புகள் உச்சநீதிமன்றத்தை அணுகி இடைக்காலத்தடை உத்தரவு பெற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. எனவேதான், அதுபோன்ற இக்கட்டான நிலை ஏற்படுவதை தடுக்க, கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.