பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதியில்லை என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நாளை பாஜகவின் வேல் யாத்திரை தொடங்க இருந்த நிலையில் தமிழக அரசு இந்த பதிலை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.