தமிழ்நாடு

ஒரு கையால் ஓட்டப்பட்ட பேருந்து: அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்!

ஒரு கையால் ஓட்டப்பட்ட பேருந்து: அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்!

webteam

சேலத்தில் இருந்து சென்னை வரை ஒரு கையால் மட்டுமே அரசு பேருந்தை ஓட்டிவந்த ஓட்டுநரை கண்டு அதில் பயணித்த பொதும‌க்கள் அதிர்ச்சியடைந்தனர்.

வலது கையில் காயம்பட்டு கட்டுப்போட்டிருந்த நிலையில், இடது கையால் மட்டுமே பேருந்தை இயக்கி வந்த ஒட்டுநரிடம் விழுப்புரம் அருகே பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், பேருந்தை நெடுஞ்சாலையில் செலுத்தாமல் புறவழி சாலை வழியாக சென்னைக்கு அந்த ஓட்டுநர் ஒட்டிவந்தார். பயணிகள் அ‌வர் ஓட்டுவதை வீடியோ எடுக்க முயன்றபோது விளக்குகளை அணைத்து அவர்களை வீடியோ எடுக்கவிடாமல் தடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் பாதுகாப்பை அலட்சியப்படுத்தி ஒரு கையால் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மற்றும் அவரை பேருந்து இயக்க அனுமதித்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காயம் காரணமாக விடுப்பு கேட்டதாகவும், ஆனால் விடுப்பு அளிக்கப்படவில்லை என்றும் ஓட்டுநர் தரப்பில் கூறப்படுகிறது.