தமிழ்நாடு

''பேருந்தை சுத்தமாக வைத்திருக்கும் பொறுப்பு நம்முடையது'' - அன்பு மொழி பேசி மனம் கவர்ந்த நடந்துநர்!

''பேருந்தை சுத்தமாக வைத்திருக்கும் பொறுப்பு நம்முடையது'' - அன்பு மொழி பேசி மனம் கவர்ந்த நடந்துநர்!

webteam

பேருந்தை சுத்தமாக வைத்துக்கொள்ளும்படி பயணிகளிடம் வேண்டுகோள் விடுத்த நடத்துனருக்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவை பகிர்ந்து பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

நாட்டை தூய்மையாக வைத்திருக்க வேண்டுமென மத்திய அரசு பல திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. தூய்மை இந்தியா திட்டம் குறித்து பல விழிப்புணர்வு பிரசாரங்களையும் அரசு செய்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசுப்பேருந்து நடத்துநர் ஒருவர் தூய்மை குறித்து பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, வேண்டுகோள் விடுக்கும் காட்சி இணையத்தில் பரவியது. 

பேருந்தில் ஏறி பயணிகளிடம் பேசும் நடத்துநர் சிவசண்முகம், ''அரசு நமக்கு புதிய பேருந்தை கொடுத்துள்ளது. இதனை சுத்தமாக வைத்திருக்க அனைவரும் உதவ வேண்டும். பல தேவைகளுக்காக இந்த பேருந்தில் பயணம் செய்வீர்கள். உங்களது பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்'' என தெரிவிக்கிறார். மேலும், பேருந்து செல்லும் இடங்களுக்கு எவ்வளவு டிக்கெட் விலை என்பதையும் மக்களுக்கு எடுத்துரைக்கிறார். 

நடத்துநரின் இந்த செயலுக்கு பேருந்தில் இருப்பவர்கள் கைத்தட்டி வரவேற்பு கொடுத்தனர். அங்குள்ள பயணி ஒருவர் செல்போனில் எடுத்த அந்த வீடியோ வைரலாகியுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து பாராட்டுகளை தெரிவித்துள்ளார்