தமிழ்நாடு

தமிழகத்தை சேர்ந்த மாணவர்களின் பாதுகாப்புக்கு குழு அமைப்பு

தமிழகத்தை சேர்ந்த மாணவர்களின் பாதுகாப்புக்கு குழு அமைப்பு

webteam

தமிழகத்திலிருந்து வேறு மாநிலங்களுக்கு உயர் மருத்துவப் படிப்பிற்கு செல்லும் மாணவர்களை பாதுகாக்க தமிழக அரசு குழு அமைத்துள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை பார்வையற்றோர் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு விஜய பாஸ்கர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் பேசிய அவர், தமிழகத்திலிருந்து வேறு மாநிலங்களுக்கு உயர்மருத்துவ படிப்பிற்கு செல்லும் மாணவர்களை பாதுகாக்க ஏற்கெனவே குழு அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். மேலும் அந்த மாணவர்களின் மனவலிமையை அதிகப்படுத்தும் விதமாக கவுன்சிலிங் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சண்டிகரில் மருத்துவ மேல்படிப்பு படித்து வந்த தமிழக மாணவர் கிருஷ்ண பிரசாத்தின் தற்கொலை தொடர்பாக பதிலளித்த போது அவர் இதை தெரிவித்தார்.