சென்னை பூந்தமல்லி முதல் பரந்தூர் வரை 52.94 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ வழித்தடம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமையவுள்ள பரந்தூர் பசுமை விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் வழித்தடம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில், முதல் கட்டமாக பூந்தமல்லி முதல் சுங்கவார்சத்திரம் வரை 27.9 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.8,779 கோடிக்கு மெட்ரோ உயர் மேம்பாலம் அமைப்பதற்கு கொள்கை ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது...
அதேபோல், பரந்தூர் விமான நிலையத்தில் இருந்து கூத்தம்பாக்கம் பேருந்து நிலையத்தை இணைக்கும் வகையில் மெட்ரோ வழித்தடம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்ததாக தமிழக அரசின் கொள்கை ஒப்புதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் விரிவான திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு நிதி ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் பரந்தூருக்கு மெட்ரோ ரயில் அமைக்கும் திட்டம் தொடங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.