நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் நிவாரணப்பணிகளை துரிதப்படுத்தும் நடவடிக்கைக்காக தமிழக அரசு 13 உதவி ஆட்சியர்களை அனுப்பியுள்ளது.
கஜா புயலால் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. புயல் சுருட்டிய மரங்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சாய்ந்து கிடக்கும் மின் கம்பங்களை சீரமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
மேலும் சில நகர்ப்புறங்களிலும், பல கிராமப்புறங்களிலும் மின் இணைப்பு முழுமையாக சரி செய்யும் பணிக்கள் நடைப்பெற்று வருகிறது. கஜா புயலால் ஏற்பட்ட சேதங்கள் அதிகமாக உள்ளதால் சீரமைப்பு பணிகள் அதிதீவிரமாக நடைப்பெற தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் கஜா புயல் சீரமைப்பு பணிகளில் துரிதப்படுத்தும் நடவடிக்கைக்காக தமிழக அரசு 13 உதவி ஆட்சியர்களை புயல் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு அனுப்பியுள்ளது. அவர்கள் புயலால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை ஆய்வு செய்து உரிய நிவாரணப்பணிகளை மேற்கொள்ளவும். குறிப்பாக புயலால் பாதித்த மக்களுக்கு மண்ணெண்ணெய், அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை கிடைக்க வழிவகை செய்யவும் தமிழக அரசு 13 உதவி ஆட்சியர்களை அனுப்பியுள்ளது.