aavin green magi x page
தமிழ்நாடு

ஆவின் கிரீன் மேஜிக் பால் விநியோகம் நிறுத்தமா? தமிழக அரசு பதில்!

பச்சை நிறப் பாக்கெட்டில் விற்கப்படும் ஆவின் கிரீன் மேஜிக் பால் விநியோகம் நிறுத்தப்பட்டதாக பரவும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.

Prakash J

சென்னையில் ஆவின் பச்சை பால் விற்பனை பாதியாகக் குறைத்து, பின்னர் அதனை முழுமையாக நிறுத்த ஆவின் நிறுவனம் முயன்று வருவதாக வெளியாகும் செய்திகள் கவலையளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். ஒரு லிட்டருக்கு 7 ரூபாய் நஷ்டம்ஏற்படுவதைக் காரணம் காட்டி, ஏழைமக்கள் பயன்படுத்தும் இந்த பாலின் விற்பனையை குறைப்பது நியாயமற்றது என்றும், தனியார் நிறுவனங்கள் இதே தரமுள்ள பாலை 68 ரூபாய்க்கு விற்கும் சூழலில் ஆவின் 44 ரூபாய்க்கு வழங்குவதே மக்களுக்குச் செய்யும் சேவை என்றும் அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.

அன்புமணி

எனவே, லாபநோக்கின்றி மக்களின் நலனுக்காகத் தொடங்கப்பட்ட ஆவின் நிறுவனம், பச்சை பால் விற்பனையை நிறுத்தும் திட்டத்தைக் கைவிட்டு, அதன் தடையற்ற விநியோகத்தை உறுதிசெய்ய வேண்டும் என தமிழக அரசை அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில், பச்சை நிறப் பாக்கெட்டில் விற்கப்படும் ஆவின் கிரீன் மேஜிக் பால் விநியோகம் நிறுத்தப்பட்டதாக பரவும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், பொதுமக்களின் தேவைக்கேற்ப கிரீன் மேஜிக் உள்ளிட்ட அனைத்து வகையான ஆவின் பால் பாக்கெட்டுகளும் தடையின்றி விநியோகம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தவறான தகவல்களை நம்பி பொதுமக்கள் குழப்பமடைய வேண்டாம் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.