tn govt on governor tea party PT
தமிழ்நாடு

ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழக அரசு அறிவிப்பு - காரணம் இதுதானா?

ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழக அரசு அறிவிப்பு - காரணம் இதுதானா?

PT WEB

குடியரசு தினத்தன்று அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். அந்தவகையில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ள நிலையில், தவெக சார்பில் விஜய் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், குடியரசுத் தினத்தையொட்டி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.