தீபாவளி நாள் மட்டுமின்றி நவம்பர் 7,8,9 ஆகிய தேதிகளிலும் திரையரங்குகளில் கூடுதலாக ஒரு காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தீபாவளி நவம்பர் 6-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மக்கள் தியேட்டர்களுக்கு செல்வார்கள். சிலர் குடும்பமாகவே, சிலர் நண்பர்களுடனோ சென்று புதிய படங்களை பார்ப்பார்கள். இதனால் டிக்கெட் கிடைக்காமல் பலர் சிரமப்படுவது உண்டு. இதனையடுத்து தீபாவளிக்கு மட்டும் மேலும் ஒரு சிறப்பு காட்சி திரையிட ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தீபாவளி மட்டுமின்றி நவம்பர் 7,8,9 ஆகிய தேதிகளிலும் திரையரங்குகளில் கூடுதலாக ஒரு காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாடு திரைப்பட விநியோகிஸ்தர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் தியேட்டர்களுக்கு செல்ல திட்டமிட்டிருந்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.