தமிழகத்தில் 15-ஆவது சட்டப்பேரவையின் எட்டாவது கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது உரையை தொடங்கினார். ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்..
- இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தும்
- தமிழக மக்கள் எந்த ஒரு மதம், சமயத்தை பின்பற்றினாலும், அவர்களை தமிழக அரசு பாதுகாக்கும்
- தமிழக மீனவர்கள் பிரச்னையில் மத்திய அரசு தலையிட்டு சுமூக தீர்வுகாண வேண்டும்
- முல்லைப் பெரியாறு அணையை வலுப்படுத்தத் தேவையான அனுமதியை கேரள, மத்திய அரசுகள் தர வேண்டும்
- மேகதாது திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்
- காவிரி-குண்டாறு நதிகள் இணைக்கும் பணியை தமிழக அரசு செயல்படுத்தும்
- கோதாவரி ஆற்றிலிருந்து குறைந்தபட்சம் 200 டிஎம்சி தண்ணீரை வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம்
- ஜெயலலிதாவுக்கு ரூ.50.80 கோடி மதிப்பில் விரைவில் மணிமண்டபம் கட்டிமுடிக்கப்படும்
- ஒவ்வொரு மாதமும் நவம்பர் 1-ஆம் தேதியை தமிழ்நாடு நாள் என அறிவித்ததற்காக முதல்வருக்கு பாராட்டுகள்