தமிழ்நாடு

ராஜிவ் வழக்கு - மத்திய அரசுக்கு ஆளுநர் அறிக்கை

ராஜிவ் வழக்கு - மத்திய அரசுக்கு ஆளுநர் அறிக்கை

webteam

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிப்பது தொடர்பான அமைச்சரவை பரிந்துரை மற்றும் பேரறிவாளன் கருணை மீது கருத்து தெரிவிக்குமாறு தமிழக ஆளூநர் பன்வாரிலால் புரோகித் மத்திய உள்துறை அமைச்சகத்தை கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக ஆளுநர் அறிக்கை அனுப்பியுள்ளதாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

பின்னணி

ராஜூவ் காந்தி கொலைவழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 7 பேரை விடுதலைக்கு பரிந்துரை செய்ய தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ராஜூவ் காந்தி கொலைவழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரின் முன்விடுதலை குறித்து ஆளுந‌ருக்கு பரிந்துரைக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. 

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றக் இக்கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். கூட்டத்தின்போது 7 பேர் விடுதலை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ராஜூவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளதாக தெரிவித்தார்.