மரியவில்சன் Pt web
தமிழ்நாடு

தமிழ்நாட்டின் நிதி நிலை என்ன? இன்று வெளியாகிறது வெள்ளை அறிக்கை!

தமிழ்நாட்டின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை இன்று மாலை 5.30 மணிக்கு வெளியிடப்படும் என நிதித்துறை அமைச்சர் மரியவில்சன் தெரிவித்துள்ளார்.

Premkumar S

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அதிகப்படியான இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் தவெக தலைவர் விஜய் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்று இருக்கிறார். மே 10-ம் தேதி நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற தனது பதவியேற்பு விழாவில் பேசிய முதல்வர் விஜய், கடந்த திமுக அரசு தமிழகத்தின் கஜானாவை காலி செய்துவிட்டு சென்றிருப்பதாகவும் தமிழகத்தின் நிதிநிலை தொடர்பாக ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.

அமைச்சரவை

இந்தசூழலில் தான், அமைச்சரவையில் 35 பேர் துறை வாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, நிதித்துறை ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் மரிய வில்சனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, அத்துறைக்கான பொறுப்புகளை கவனித்து வந்த நிலையில் தான், இன்று செய்தியாளர்களை சந்தித்திருக்கும் அவர், வெள்ளை அறிக்கை வெளியிடுவது தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

அதன்படி, இன்று மாலை 5.30 மணிக்கு தமிழ்நாட்டின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் மரியவில்சன் வெளியிடவுள்ளார். இந்த அறிக்கையில், அரசின் வரவு செலவு கணக்குகள், முந்தைய நிர்வகத்தின் செயல்பாடுகள் மற்றும் கடன்கள் ஆகியவை இந்த அறிக்கை இடம்பெறும்.