தமிழ்நாடு

சிறப்புக் காட்சிகளை ரத்து செய்யக்கோரி அறிக்கை அனுப்பிய அரசு..!

சிறப்புக் காட்சிகளை ரத்து செய்யக்கோரி அறிக்கை அனுப்பிய அரசு..!

webteam

சிறப்புக் காட்சிகளை ரத்து செய்யக் கூறி அறிக்கை அனுப்பப்பட்டுவிட்டதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

கோவில்பட்டியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூசெய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தீபாவளியையொட்டி வெளியாக உள்ள ‘பிகில்’ திரைப்படத்தின் ரசிகர்கள் காட்சிக்கான அதிக கட்டண புகார் குறித்து கேட்டதற்கு, தீபாவளியையொட்டி திரையரங்குகளில் சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை என தெரிவித்தார். அதை மீறி சிறப்பு காட்சிகளை திரையிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் கூறினார்.

இந்நிலையில் இதுகுறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “சிறப்புக் காட்சிகளை ரத்து செய்யக் கூறி அறிக்கை அனுப்பப்பட்டுவிட்டது. மேலும் முன்பதிவு செய்தவர்களுக்கு பணத்தை திருப்பி வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக கட்டணம் வசூலிப்பது கட்டுப்படுத்தப்படும்” எனப் பதிவிட்டுள்ளார்.