அதிக கட்டணம் வசூலித்த திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
அரசு நிர்ணயித்ததற்கு அதிகமாக கட்டணம் வசூலிக்க கூடாது என்ற உத்தரவை திரையரங்குகள் மீறியுள்ளதாகவும், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கூடுதல் கட்டணம் வசூலித்த திரையரங்குகள், திரையரங்கு உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்கள் ஜூலை 10 ஆம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி, திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்திற்கு உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.