தமிழக அரசின் வருவாய் துறையின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அத்துறை இனி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை என அழைக்கப்படும். இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதையடுத்து வருவாய் துறை அமைச்சராக இருந்த ஆர்.பி.உதயகுமார் இனி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் என அழைக்கப்படுவார் என தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலம் தொடர்பான ஆவணங்களை பராமரிப்பதும், அரசு நிலங்களை பாதுகாப்பதும், நிலம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுவதும் வருவாய்த் துறையின் முக்கிய கடமைகளாக உள்ளது.