மத்திய அரசின் 3 ஆண்டு கால சாதனையை, தமிழக அரசு மலராக வெளியிடுகிறது என்று வெளியான தகவலை செய்தித்துறை மறுத்துள்ளது.
மத்திய அரசு கேட்டுக் கொண்டதால் அவர்களின் திட்டங்கள் குறித்த விவரங்களை மட்டும் சேகரித்து வழங்குவதாக தமிழக அரசின் செய்தித்துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழக அரசின் சாதனைகளை ஆண்டுதோறும் தொகுத்து வழங்குவது போல, மத்திய அரசின் திட்டங்களையும் பயனாளிகளின் பேட்டியுடன் தொகுத்து வழங்க மத்திய அரசு கேட்டுக் கொண்டதால் மத்திய அரசு அதிகாரிகள் இதனை தொகுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.