தமிழகத்தில் 61 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்திற்கு புதிய சட்ட ஒழுங்கு டி.ஜி.பி அறிவிக்கப்படவுள்ள சூழ்நிலையில், 61 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 16 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் சென்னையில் உள்ள துணை ஆணையர்கள் பலரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பூக்கடை துணை ஆணையராக இருக்கக்கூடிய அரவிந்தன், திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி-யாக மாற்றப்பட்டுள்ளார். சென்னையில் நில அபகரிப்பு பிரிவு எஸ்.பி ஆக இருக்கக்கூடிய நாகஜோதி, சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் செந்தில் குமார், சென்னை காவல்துறை நிர்வாகப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். மயிலாப்பூர் காவல்நிலைய துணை ஆணையர் மயில்வாகனன், தென்சென்னை போக்குவரத்து காவல்துறை துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். கட்டுப்பாட்டு அறை துணை ஆணையர் பிரபாகர், பரங்கிமலை காவல்துறை துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். பரங்கிமலை துணை ஆணையர் முத்துசாமி, அண்ணாநகர் காவல்துறை துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். கோவையில் பாலியல் வன்கொடுமை புகாரை விசாரித்த பாண்டியராஜ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். இவர் தற்போது கரூர் எஸ்.பி-யாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.