தமிழ்நாடு

பொங்கல் பரிசு வழங்க தடையில்லை - மாநில தேர்தல் ஆணையர் 

பொங்கல் பரிசு வழங்க தடையில்லை - மாநில தேர்தல் ஆணையர் 

webteam

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பால் பொங்கல் பரிசு வழங்க தடையில்லை என மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்

உள்ளாட்சி தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதாக தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். அதே வேளையில் பொங்கல் பரிசு வழங்க தடையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30-ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில், 37,380 பதவிகளுக்கு முதல் கட்ட தேர்தல் டிசம்பர் 27-ஆம் தேதி நடைபெறும் என்றும், 38,914 பதவிகளுக்கு இரண்டாம் கட்டமாக டிசம்பர் 30 அன்று தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்தார். தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. தமிழக அரசின் பொங்கல் பரிசு வழங்க தடையில்லை. ஏற்கெனவே பொங்கல் பரிசு வழங்குவது தொடங்கியுள்ளதால் அதற்கு தடையில்லை என தெரிவித்துள்ளார்.