தமிழ்நாடு

ஜனவரி 3ஆம் தேதி முதல் பொங்கல் சிறப்பு தொகுப்பு விநியோகம் - தமிழக அரசு அறிவிப்பு

ஜனவரி 3ஆம் தேதி முதல் பொங்கல் சிறப்பு தொகுப்பு விநியோகம் - தமிழக அரசு அறிவிப்பு

Sinekadhara

ஜனவரி 3ஆம் தேதிமுதல் ரேஷன் கடைகளில் பொங்கல் சிறப்பு தொகுப்புப் பொருட்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

2022 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாட 21 பொருட்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பு மக்களுக்கு வழங்கப்படும் என தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதில், பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, ரவை, கோதுமை, உப்பு மற்றும் முழு கரும்பு ஆகிய பொருட்கள் இடம்பெறும் எனவும் அறிவித்திருந்தது.

இந்நிலையில் ஜனவரி 3ஆம் தேதிமுதல் ரேஷன் கடைகளில் இந்த பொங்கல் சிறப்பு தொகுப்புப்பொருட்கள் வழங்கப்படும் என தற்போது தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. மேலும், இத்திட்டத்தை ஒருங்கிணைந்து திறம்பட செயல்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.