நெடுந்தீவு அருகே எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர் கதையாக நடந்து வருகிறது. இந்நிலையில், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 7 பேரை, எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினர் கைது செய்து காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர். அவர்களது 2 படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
முன்னதாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு ராமேஸ்வரம் மாவட்டத்தை சேர்ந்த 4 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டது குறிப்படத்தக்கது.