தமிழ்நாடு

தமிழக மீனவர்கள் 13 பேர் சிறைபிடிப்பு

தமிழக மீனவர்கள் 13 பேர் சிறைபிடிப்பு

webteam

யாழ்ப்பாணம் அருகே அத்துமீறி மீன் பிடித்ததாக, தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை வடமாராட்சியின் கிழக்கே கண்டிகுளம் கடற்பகுதியில் மீன் பிடித்ததாகக் கூறி, ஒரு விசைப்படகுடன் நாகை மீனவர்கள் 9 பேர் சிறைபிடிக்கப்பட்டனர். அதேபோல நெடுந்தீவு அருகே மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் கைதுசெய்யப்பட்டனர். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 33 மீனவர்கள் மற்றும் 129 விசைப்படகுகள் விடுவிக்கப்படாமல் இருக்கும்போது, இந்த கைது சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் இலங்கையின் காங்கேசன் துறைமுகத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.