தமிழ்நாடு

மீனவர் விவகாரம்: சுப்பிரமணியன் சுவாமி சர்ச்சை கருத்து

மீனவர் விவகாரம்: சுப்பிரமணியன் சுவாமி சர்ச்சை கருத்து

webteam

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சுடப்படுவது குறித்து பாரதிய ஜனதா மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ள பொறுக்கிகள் நகரின் சாக்கடைகளில் தஞ்சம் புகுவதை விட்டுவிட்டு கட்டுமரங்களை வாடகைக்கு எடுத்துக்கொண்டு கடலுக்குச் சென்று இலங்கை கடற்படைக்கு எதிராக போரிடவேண்டும் என தமது ட்விட்டர் கணக்கில் கூறியுள்ளார். இலங்கை -இந்திய மீனவர் பிரச்னைக்கு ஒரு தீர்வு இருப்பதாகவும் ஆனால் இரு நாடுகளிலும் உள்ள சில அமைப்புகள் அந்த தீர்வை வரவிடுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.