பட்ஜெட் 2025 - 2026 facebook
தமிழ்நாடு

உலக தமிழ் ஒலிம்பியாட் To தொல்லியல் அகழாய்வுகள் | அறிவிப்புகளை அடுக்கிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு!

தமிழக பட்ஜெட் 2025 -2026 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல்.

ஜெனிட்டா ரோஸ்லின்

INEQUALITY IS A CHOICE, BUT WE CAN CHOOSE A DIFFERENT PATH என்பதன் தமிழாக்கம் "சமத்துவமின்மை என்பது ஒரு வாய்ப்பு, ஆனால் நாம் வேறு பாதையைத் தேர்ந்தெடுக்கலாம்" என்ற பொருளியல் அறிஞர் தாமஸ் பிக்கெட்டியை மேற்கோள் காட்டி நிதியமைச்சர் உரையைத் தொடங்கினார்.

அமைச்சர் தங்கம் தென்னரசின் உரை!

  • சென்னை மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், வேளச்சேரி - குருநாத் கல்லூரி வரை 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு 310 கோடியில் மேம்பாலம் அமைக்கப்படும். 1500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடையாறு நதி தூய்மை செய்யும் பணி தொடங்கி உள்ளது.

  • முதலில் சைதாப்பேட்டை முதல் திருவிக பாலம் வரை பணிகள் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் . சென்னையில் மழைநீர் உறிஞ்சும் 7 பல்லுயிர் பூங்காக்கள்

  • கலைஞர் கனவு இல்லம் 3500 கோடியில் 1 லட்சம் புதிய வீடுகள் அமைக்கப்படும்.

  • 3,790 கோடி ரூபாயை 100 நாள் வேலை திட்டத்திற்கு மத்திய அரசு விடுவிக்கவில்ல.

  • கொருக்குப்பேட்டையில் 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் . 6100 கிலோ மீட்டர் தொலைவுக்கு கிராம சாலைகள் மேம்படுத்தப்படும்.

  • நகர்புற வளர்ச்சித்துறைக்கு 26 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு.

மேலும், உலக தமிழ் ஒலிம்பியாட் ரூ. 1 கோடி பரிசுத்தொகை.

தமிழ்நாட்டில் 8 இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள்.

  • சிவகங்கை - கீழடி

  • சேலம் - தெலுங்காநல்லூர்

  • கோயம்புத்தூர் - வெள்ளலூர்

  • கள்ளக்குறிச்சி- ஆதிச்சனூர்.

  • கடலூர் - மணிக்கொல்லை

  • தென்காசி - கரிவலம்வந்தநல்லூர்

  • தூத்துக்குடி - பட்டணமருதூர்

  • நாகப்பட்டினம்

ஈரோடு மாவட்டத்தில் நொய்யல் அருங்காட்சியகம் ரூ. 22 கோடி.

இராமநாதபுரத்தில் நாவாய் அருங்காட்சியகம் ரூ. 21 கோடி

மேலும், 45 உலக மொழிகளில் திருக்குறள். ஐ.நா. அவை அங்கீகரித்துள்ள 193 மொழிகளுக்கும் மொழிபெயர்க்கப்பட்ட பெருமை பெறுகிறது திருக்குறள்.

சீரமைக்க இயலாத வீடுகளுக்குப் பதிலாகப் புதிய வீடுகள் .

இந்நிலையில், பட்ஜெட் உரை தொடங்கும் முன்னரே, தமிழக அரசின் டாஸ்மார்க் ஊழல் புகாரைக் கண்டித்து அதிமுக எம் எல் ஏக்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

நயினார் நாகேந்திரன்:

ஊழலை மறைக்க மும்மொழி கொள்கை என்கிறார்கள், ரூபாய் என கொண்டு வந்துள்ளனர் - நயினார் நாகேந்திரன்

வானதி சீனிவாசன்:

மாநில அரசு பட்ஜட் தாக்கல் செய்கின்றனர். அமலாக்கத்துறை மிக தெளிவாக தங்கள் அறிக்கையில் 1000 கோடி ரூபாய் அளவில் ஊழல் செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளது.

இந்த பட்ஜெட் தாக்கல் செய்ய எந்த ஒரு அருகதையும் இந்த அரசுக்கு இல்லை. ஊழல் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சினைகளை திசை திருப்ப ரூபாய் என கொண்டு வந்துள்ளனர். அரசு பொருபெற்கும்போது எடுக்கும் உறுதி மொழியை முதலமைச்சர் மீறியுள்ளார். மாநில அரசு ஊழலை மறைக்க முதலமைச்சர் நாடகம் நடத்துகின்றனர். என்று தெரிவித்துள்ளார்.