கே. பழனிசாமி pt web
தமிழ்நாடு

94% வெற்றித் தொகுதிகள்.. அதிமுகவின் கூட்டணிக் கணக்கு சொல்வதென்ன?

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், எதிக்கட்சியான அதிமுக 169 நேரடியாக களம் காணவிருக்கிறது. அதேசமயம், 65 தொகுதிகள் பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

PT WEB

2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகளில் 94 சதவீதத்தை இந்தத் தேர்தலில் அக்கட்சி தக்கவைத்துக் கொண்டுள்ளது. வடக்கு மாவட்டங்களில் 47 தொகுதிகளை அதிமுக பெற்றுள்ளது. இதில் முந்தைய தேர்தலில் 10 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றிருந்தது. இந்த முறை 11 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு கொடுத்துள்ளது. அதில் கடந்த முறை அதிமுக ஒரேயொரு தொகுதியை மட்டுமே வென்றிருந்தது .

கே. பழனிசாமி

காவிரிப் படுகை மாவட்டங்களில் ஏற்கெனவே கடந்த தேர்தலில் வென்றிருந்த 4 தொகுதிகள் உட்பட 28 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. கூட்டணிக் கட்சிகளுக்கு 8 தொகுதிகளை அதிமுக கொடுத்துள்ளது. அதில் அதிமுக வென்ற தொகுதி என்று எதுவும் கிடையாது. மேற்கு மாவட்டங்களில் 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வென்ற 32 தொகுதிகள் உட்பட 41 தொகுதிகளில் அதிமுக இந்த முறை போட்டியிட உள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு தங்கள் வசம் ஏற்கெனவே இருந்த 3 தொகுதிகள் உட்பட 7 தொகுதிகளை கொடுத்துள்ளது.

தென் மாவட்டங்களில் ஏற்கெனவே வெற்றி பெற்றிருந்த 16 தொகுதிகள் உட்பட 36 தொகுதிகளில் அதிமுக இந்த முறை போட்டியிடுகிறது. தென்மாவட்டங்களில் கடந்த தேர்தலில் அதிமுக வெற்றியை பார்க்காத 14 தொகுதிகள் இந்த முறை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் கூட்டணிக் கட்சிகளுக்கு இந்த முறை ஒதுக்கப்பட்டுள்ள 39 தொகுதிகளில் 4 தொகுதிகளில் மட்டுமே முந்தைய தேர்தலில் அதிமுக வென்றி கண்டிருந்தது.