தமிழ்நாடு

மாற்றப்படுகிறாரா தமிழக டிஜிபி..? முதலமைச்சருடன் திடீர் சந்திப்பு

Rasus

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, அவரது இல்லத்தில் தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் சந்தித்துப் பேசினார்.

கடந்த 2013-ம் ஆண்டு குட்கா புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிக்கபட்ட நிலையில், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து சில குட்கா ஆலைகள் இயங்கியதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில் குட்கா முறைகேடு விவகாரத்தில் திடீர் திருப்பமாக முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி உள்ளிட்டோர் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். பல்வேறு இடங்களில் காலை முதல் இந்த சோதனை சோதனை நடைபெற்றது.

இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, அவரது இல்லத்தில் தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் சந்தித்துப் பேசினார். குட்கா ஊழல் முறைகேடு வழக்கில், டிஜிபி இல்லத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்த நிலையில் அவர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

முன்னதாக குட்கா விவகாரத்தில், சுகாதாரத்துறை அமைச்சர், காவல்துறை டிஜிபி, சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஆகியோரின் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தியிருப்பது தமிழகத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.