தமிழ்நாடு

ஆறுமுகசாமி ஆணையம் - ஓ.பன்னீர்செல்வத்திற்கு 6ஆவது முறையாக சம்மன்

rajakannan

விசாரணைக்கு ஆஜராகும்படி ஆறாவது முறையாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலிலதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணண், அப்போலோ மற்றும் அரசு மருத்துவர்கள் உள்பட ஏராளமானோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். 

இதனையடுத்து, விசாரணைக்கு ஆஜராகும்படி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஏற்கனவே ஐந்து முறை சம்மன் அனுப்பப்பட்டது. எனினும் பல்வேறு காரணங்களால் அவர் ஆணையத்தில் ஆஜராகவில்லை. 

இந்நிலையில், தற்போது 6வது முறையாக ஓ.பன்னீர்செல்வத்திற்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வரும் 28ஆம் தேதி ஆஜராகும்படி அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் சசிகலா மற்றும் அப்போலோ தரப்பு ஓ.பன்னீர்செல்வத்திடம் குறுக்கு விசாரணை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.