தமிழ்நாடு

உம்பன் புயல் எதிரொலி: தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு !

jagadeesh

உம்பன் புயல் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இப்போது உம்பன் புயல் சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கே சுமார் 670 கிமீ தொலைவிலும்; புவனேஸ்வரியிலிருந்து தெற்கே 1160 கிமீ ; கோல்கத்தாவிலிருந்து 1400 கிமீ தெற்கு தென் மேற்கு திசையில் உள்ளது. இது தற்போது வடக்கு வடமேற்கு திசையில் 16 கிமீ வேகத்தில் நகர்ந்து கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உம்பன் புயல் காரணமாக மீனவர்கள், தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடல், லட்சத்தீவு குமரிக் கடல், தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என வலியுறுத்தப்படுகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தைப் பொறுத்தவரை நேரடியாக மழை இருக்காது என்றும், புயல் விலகிச் செல்வதால் வரும் நாட்களில் தமிழகத்தில் குறிப்பாகக் கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை உயர உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.