தமிழ்நாடு

காஞ்சிபுரத்தில் இன்று 368 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..?

காஞ்சிபுரத்தில் இன்று 368 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..?

jagadeesh

காஞ்சிபுரத்தில் இன்று மட்டும் 468 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான அறிவிப்புகளை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி தமிழகத்தில் 5,879 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,51,738 அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று 1,074 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுதவிர மற்ற மாவட்டங்களின் நிலவரத்தை காணலாம்.

செங்கல்பட்டு 314, கோவை 238, கடலூர் 182, அரியலூர் 32, தருமபுரி 9, ஈரோடு 8, கள்ளக்குறிச்சி 60, கன்னியாகுமரி 198, கரூர் 36, கிருஷ்ணகிரி 74, மதுரை 166, நாகப்பட்டினம் 37, நாமக்கல் 32, நீலகிரி 36, பெரம்பலூர் 20, புதுக்கோட்டை 91, ராமாநாதபுரம் 37, ராணிப்பேட்டை 116, சேலம் 51, சிவகங்கை 61, தென்காசி 178, தஞ்சாவூர் 167, தேனி 327, திருவள்ளூர் 305, திருப்பத்தூர் 22, திருவண்ணாமலை 242, திருவாரூர் 45, தூத்துக்குடி 243, திருநெல்வேலி 181, திருப்பூர் 36, திருச்சி 136, வேலூர் 197, விழுப்புரம் 158, விருதுநகர் 286.