தேர்தல் வெற்றிக்காக பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துத் தெரிவித்தார்.
உத்தரப்பிரதேசம், கோவா உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. இதன் மூலம் அறுதிப் பெறும்பான்மையுடன் ஆட்சியமைக்க இருக்கிறது. இதேபோல, உத்தராகண்ட் மாநிலத்திலும் பாஜக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்காக பிரதமர் மோடியை, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்ததாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.