முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 22 மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
தலைமைச் செயலகத்தில் காலை 11 மணியளவில் காணொலி முறையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பல்வேறு துறை உயரதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர். கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் ஊரடங்கு அமலாக்கம் குறித்து ஆட்சியர்களிடமும் காவல் கண்காணிப்பாளர்களுடனும் இந்த கூட்டத்தில் முதலமைச்சர் கேட்டறிவார் எனத் தெரிகிறது.
இதைத் தொடர்ந்து மருத்துவத் துறை உயரதிகாரிகளிடமும் கொரோனா தடுப்பு பணிகள், ஊரடங்கு தளர்வு குறித்து முதலமைச்சர் பேசுவார் எனக் கூறப்படுகிறது. தற்போது அமலில் உள்ள கொரோனா ஊரடங்கு வரும் 21ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் புதிய தொற்றுகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்த சூழலில் 22ஆம் தேதி முதல் மேலும் தளர்வுகள் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது